பியொரியா தமிழ் சங்கம்

​Tamil Association of Peoria

A REGISTERED, NON-PROFIT, TAX-EXEMPT 501 C(3) ORGANIZATION

நெகிழி 


உலகம் முழுவதும் 500 பில்லியனுக்கும் மேலான மெட்ரிக் டன் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்தப்படுகிறது. ஒரு நிமிடத்திற்கு உலகமெங்கும் 
பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள் மட்டும் 1 மில்லியன். மலை போல குவித்து வைக்கப்பட்டிருக்கும் பிளாஸ்டிக் பொருள்களின் மொத்த எடை 
12 மில்லியன் மெட்ரிக் டன். பிளாஸ்டிக் மக்காத ஒரு பொருள். அவை மக்கிப் போக சுமார் 500 ஆண்டுகளிலிருந்து 1000 ஆண்டுகள் ஆகும் என்கிறது 
அறிவியல். கடந்த 40 வருடங்களாகத்தான் பிளாஸ்டிக் பொருள்கள் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அப்படியானால் பயன்படுத்தப்பட்டு தூக்கி 
வீசப்பட்ட மக்காத பிளாஸ்டிக் குப்பைகள் எங்கே போயிருக்குமென யூகிக்க முடிகிறதா?
அமெரிக்காவில் இருக்கிற தீவு மிட் வே. அங்கு அல்பட்ராஸ் என்கிற கடற்பறவை இனம் வசிக்கிறது. அவை கடலில் நெடுந்தூரம் பறந்து, பறந்து 
தன் குஞ்சிற்கு உணவை எடுத்து வந்து ஊட்டுகிறது. 90 நாள்களே ஆன, அந்தப் பறவைக் குஞ்சு உணவை உட்கொள்கிறது. சில மணி நேரங்களில் 
குஞ்சுப் பறவை கரையில் இறந்து விழுகிறது. தன் குழந்தை இறந்ததைக் கண்டு நீண்ட நேரம் அங்கேயே உட்கார்ந்திருந்தது அந்தத் தாய்ப்பறவை. 
இறந்த பறவையை ஒரு மாணவர் எடுத்து ஆராய்ச்சி செய்கிறார். அதன் வயிற்றில் 276 பிளாஸ்டிக் துண்டுகள் இருந்ததைக் கண்டு 
அதிர்ச்சியடைகிறார். அத்தனை நாள்களும் பிளாஸ்டிக் துண்டுகளை, உணவு என எண்ணி அந்தத் தாய்ப்பறவை குஞ்சிற்கு கொடுத்து வந்துள்ளது. 
ஆஸ்திரேலியாவிற்கு அருகில் இருக்கிற தீவு லேண்ட் ஹொவ். அங்கிருந்த பறவை இனத்தின் பெயர் ஷேர் வாட்டர் கடல் பறவை. இவை கடலில் 
பல மைல்கல் பயணித்து உணவு தேடுபவை. கடற்கரையில் இறந்து போன ஒரு பறவையை ஜெனிஃபர் லெவெர்ஸ் என்கிற பெண்மணி எடுத்து 
ஆராய்ச்சி செய்கிறார். அதன் உடலில் சுமார் 185 பிளாஸ்டிக் பொருள்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியானார்.
பயன்படுத்தப்பட்டுத் தூக்கி எறியப்பட்ட குப்பையில் 79 சதவிகிதக் குப்பைகள் கடலில் கிடக்கின்றன என்கிற உண்மை உலகிற்குத் தெரியும். ஆனால் 
அவை ஒன்றிணைந்து கடலின் ஐந்து பக்கங்களில் மிகப் பெரிய குப்பைக் கிடங்கை உருவாக்கி வைத்திருக்கின்றன என்பதுதான் தெரியாது. கடலில் 
கலக்கும் பிளாஸ்டிக் குப்பைகள் தொடர்ச்சியாகக் கடலில் மிதப்பதால், காற்று மற்றும் அலைகளின் செயல்களால் கலக்கப்பட்டு அவை கடலின் 
நீரோட்டத்திற்கு ஏற்ப பயணிக்கின்றன. ஆழ்கடலின் கடல் சங்கமிக்கிற இடத்தில் எல்லாக் குப்பைகளும் ஒரே இடத்தை மையமாக வைத்துச் சுழல 
ஆரம்பிக்கின்றன. அவற்றை விட்டு பிளாஸ்டிக் பொருள்கள் கடந்துபோக முடியாத அளவிற்கு நீரோட்டம் இருக்கிறது. அப்படி வந்து சேருகிற 
மொத்தக் குப்பைகளும் ஒரே இடத்தில் மலைபோல தேங்க ஆரம்பிக்கிறது. இப்படித்தான் நடுக்கடலில் குப்பைக் கிடங்கு உருவாக்கியிருக்கிறது. 
அப்படி மொத்தம் ஐந்து ஆழ்கடல் குப்பைக் கிடங்குகள் இருக்கின்றன. அவற்றிற்கு கார்பேஜ் பேட்ச் எனப் பெயரிட்டிருக்கிறார்கள்.
உலகில் மொத்தம் வடக்கு பசிபிக் கடல், தெற்கு பசிபிக் கடல், தெற்கு அட்லான்டிக் கடல், வடக்கு அட்லான்டிக் கடல், இந்தியப் பெருங்கடல் ஆகிய 
ஐந்து கார்பேஜ் பேட்ச் கிடங்குகள் இருக்கின்றன. இவை மேலோட்டமாகத் தெரிவதில்லை. ஆனால் கடலின் மையப் பகுதியில் மையம் 
கொண்டிருக்கின்றன. பிளாஸ்டிக் பைகள் மட்டுமே கடலில் இருக்கிற உயிரினங்களுக்கு மிக முக்கிய அச்சுறுத்தலாக இருக்கிறது. கடல் வாழ் 
உயிரினங்களில் உணவுச் சங்கிலி முறை மிக முக்கியமானது. ஒரு சிறிய மீன் ஒரு பிளாஸ்டிக் கவரை விழுங்கிவிட்டால், அந்த மீனை 
உட்கொள்ளும் இன்னொரு பெரிய மீனுக்கும் அந்த பிளாஸ்டிக் கடத்தப்படுகிறது. இப்படிப் பல உயிரினங்களுக்கு அந்த பிளாஸ்டிக் பயணப்படுகிறது. 
சில வகை மீன்களில் அந்த பிளாஸ்டிக் செரிக்கப்படுகிறது. அப்போது பிளாஸ்டிக் ரசாயனப் பொருளாக உயிரினத்தின் உடலில் கலந்து விடுகிறது. 
ஒவ்வொரு கடல் உயிரினமாகப் போகிற பிளாஸ்டிக், உணவுச் சங்கிலி முறையில் கடைசியாக மனிதனிடமே திரும்பிவருவதுதான் மிகப் பெரிய 
ட்விஸ்ட்.
15 டன் எடை கொண்ட ப்ரைட் வகை திமிங்கலத்தை, சாதாரண பிளாஸ்டிக் கொலை செய்ததுதான் பிளாஸ்டிக் அபாயம் குறித்து உலகத்திற்குச் 
சொன்ன மிகப் பெரிய துயரம். ஆகஸ்ட் 2000 - ம் ஆண்டில், எட்டு மீட்டர் பிரைய்டின் திமிங்கிலம் கெய்ன்ஸ் கடற்கரையில் ஒதுங்கியது. உயிருக்குப் 
போராடிய அந்தத் திமிங்கலத்தை எவ்வளவோ போராடியும் காப்பாற்றமுடியவில்லை. திமிங்கலத்தை பிரேதப் பரிசோதனை செய்ததில் அதன் 
வயிற்றில் 6 மீ 2 பிளாஸ்டிக் பைகள் சிக்கியிருந்தன. பல பிளாஸ்டிக் பொருள்களும் அதன் வயிற்றில் இருந்தன. ப்ரைடேயின் திமிங்கலங்கள் ஒரு 
முறை உணவிற்காக வாயைத் திறந்து மூடினால் 75 ஆயிரம் லிட்டர் தண்ணீர் அதன் வாயிற்குள் செல்லும். அந்த அளவிற்கு அதன் முகப்பகுதி 
அகலமாக இருக்கும். ஒரு வேலை அந்தப் பிரைய்டின் திமிங்கிலம் கடலில் இறந்திருந்தால், அதன் உடலில் இருந்த பிளாஸ்டிக் இன்னும் பல 
உயிர்களைக் கொல்ல காரணமாக இருந்திருக்கும். பல ஆண்டுகளாகக் கடலில் கிடக்கிற பிளாஸ்டிக் பல துண்டுகளாக உடைகின்றன. பல மைக்ரோ 
துண்டுகளாக உடைந்து கடலில் கிடக்கிற பிளாஸ்டிக்கை மீன்கள் உணவாக எடுத்துக்கொள்கின்றன. அந்த மீன்களைக் கடல் வாழ் பறவைகள் 
உணவாக உண்கின்றன. முதல் பத்தியில் இறந்து போன இரண்டு பறவைகளுக்கும் இதுவே காரணம்.
பிளாஸ்டிக் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு இருக்கும் எனச் சொல்ல முடியாது, இன்னும் எவ்வளவு இனங்களைக் கொல்லும் எனச் சொல்லிவிட 
முடியாது. ஆனால் பிளாஸ்டிக் இருக்கிற வரை ஒவ்வோர் இனமாகக் கொல்லும். மனிதன் தனக்கு எதிராக இருக்கும் எனத் தெரிந்தும் ஒன்றை 
உருவாக்குகிறான், பயன்படுத்துகிறான், தூக்கி வீசுகிறான். எல்லா வினைகளுக்கும் ஓர் எதிர் வினை உண்டு, கடல், பறவை, மீன்கள் என அழிவது 
பிளாஸ்டிக் மனிதனுக்குச் செய்கிற எதிர்வினை.......
கையில் துணிப் பையுடன் கடைவீதி செல்வோரை ஏளனமாய்ப் பார்க்காதீர்கள்; அவர், சுற்றுச்சூழலுக்கு தன்னாலான சேவையைச் செய்கிறார்!

​​


----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

னை மரம் நம் முயற்சி இன்றி தானே இயற்கையாக வளர்ந்து நமக்கு வேண்டிய பல பயன்களை கொடுக்கும் ஓர் இயற்கை வளம்.

பனை மரத்தின் சில பயன்கள் பதநீர், பனை ஓலை, நுங்கு என நாம் அறிவோம்.


இதைவிட முக்கியமான பயன் பனை மரம் ஆறு,குளம்,குட்டை போன்ற நீர்நிலைகள் வற்றாமல், தரிசு நிலங்களின் நிலத்தடிநீர்  குறையாமல் காக்கும்.


கோடை காலத்தின் வெப்பத்திலும் பனை மரத்தின் தண்டு ஈரப்பதத்தை தக்கவைத்துக்கொள்கிறது. இது வறண்ட இடத்திலும் நிலத்தடி நீர் குறையாமல் காக்கிறது. நீர்நிலைகளை சுற்றி பனை மரம் இருக்கும்போது அதன் வேர்கள் நேராக பூமிக்கு சென்று வரப்புக்கு வலுசேர்க்கிறது.


தமிழகத்தில் உதாரணத்துக்கு மதுரை மாவட்டத்தில் 10 வருடத்திற்கு முன் 22% பனை மரங்கள் இருந்தன. இப்போது 7%மாக  குறைத்துள்ளது.


இந்த நிலையை மாற்ற பனை விதை நடும் முகாம் தமிழகம் எங்கும் இளைஞர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் விழிப்புணர்ச்சி பெற்றுவருகிறது. பனை விதைகளை  அரை அடி ஆழத்தில் குழி தோண்டி மண்ணில் விதைக்க வேண்டும். மழைக்காலம் வரும் முன் விதைத்ததால் எந்த வித பராமரிப்பும் இன்றி இயல்பாக வளரும்.


பனை விதை நடும் முகாம் பற்றிய காணொளி
https://youtu.be/oDFe1WkGsRU


பனை மரம் வளர்ப்போம்!                                    நீர்நிலைகளை காப்போம்! 


Palm Tree is a natural resource that can be grown naturally without our effort and gives us many benefits.

We know some of the benefits of palm trees like palm water, palm leaves, nuts etc.


More importantly, the palm tree will protect the river, lake and pond from drought. It will also help in maintaining groundwater level in dry land. The stem of the palm tree retains moisture in the heat of summer. When water bodies are surrounded by palm trees, its roots grow straight to the earth and strengthens the tank bund.


In Madurai district of Tamil Nadu, 10 years ago there were 22% palm trees which is now reduced to 7%.


The palm seed planting system in Tamil Nadu is getting more awareness among youth and volunteers everywhere. The palm seeds should be planted in the soil at half feet depth. Sowing before the rainy season will help palm tree grow naturally without any care.
Video on palm seed plantation below


https://youtu.be/oDFe1WkGsRU

Plant more palm trees!                                                                 Save Water bodies! 
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

சீமைக்கருவேல மரங்கள் தமிழகத்தில் பரவி உள்ளன. இம்மரம் 60 ஆண்டுகளுக்கு முன் விறகு தட்டுப்பாட்டை குறைப்பதற்காக தமிழகத்தில் விதைக்கப்பட்டது.  இது விவசாய நிலங்களில் பரவியுள்ளது.


இதன் முக்கிய கேடுகள்.
1. சுமார் 300 அடி ஆழம் வரை வேர் சென்று நிலத்தடி நீரை உறிந்து பாதிப்பு ஏற்படுத்துகிறது.
2. காற்றிலுள்ள ஈரப்பதத்தை உறிஞ்சுகிறது.
3. இதன் அருகே எந்த தாவரமும் வளராது.

சீமைக்கருவேல மரங்கள் பற்றிய காணொளி 

https://www.youtube.com/watch?v=ees4tsIAtGc
https://www.youtube.com/watch?v=3qWgEsN1Xr4


சீமைக்கருவேல மரங்கள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம். விவசாயம் செழிக்க நிலத்தடி நீரை காப்போம்..


இதை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிரவும். 


Prosopis juliflora or the Seemai Karuvelamaram is an invasive weed species introduced in India during the British period. This alien species was introduced in India, about 60 years ago, to meet the growing demand for firewood. Today, this weed plant has spread extensively on agricultural land in many Indian states, especially Tamil Nadu.

The Karuvelamaram is a particularly dangerous and hardy weed which creates the following issues:

1. Its roots can reach so deep beneath the ground that it can suck up groundwater from as deep as 300 ft. beneath ground level.
2. In the absence of groundwater, the Karuvelamaram can absorb moisture from the air, making the air dry.
3. Most other plants cannot survive beside the Karuvelamaram.
Find more information about how this weed plant is threatening groundwater levels in Tamil Nadu here.


https://www.youtube.com/watch?v=ees4tsIAtGc
https://www.youtube.com/watch?v=3qWgEsN1Xr4

So let’s join hands in abolishing the karuvelamaram from Tamil Nadu. Let’s help agriculture flourish in our state by protecting the groundwater levels.
Please share this message with your friends and family and spread the word about the weeds that are ruining our farmers.